இலங்கை மக்களுக்கு நன்றி: டேவிட் வார்னர் நெகிழ்ச்சி
By DIN | Published On : 12th July 2022 03:27 PM | Last Updated : 12th July 2022 03:35 PM | அ+அ அ- |

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எங்களை சிறப்பாக பார்த்துக் கொண்ட இலங்கைக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆஸ்திரேலியாவுக்கு இடயேயான டி20 போட்டியில் 1-2 என்ற கணக்கில் இலங்கை தோல்விப் பெற்றது. ஒருநாள் தொடரில் 3-2 வரலாற்று வெற்றியைப் பெற்றது. டெஸ்டில் 1-1 என சமநிலையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பது அனைவரும் தெரிந்ததே. அங்கு அடிப்படை தேவையான எரிபொருள், மருந்துகள் கூட கிடைக்காத நிலை. இந்த கடினமான சூழ்நிலையிலும் கிரிக்கெட் தொடரினை வெற்றிகரமாக நடந்திய இலங்கை மக்களுக்கு நன்றி தெரிவித்து டேவிட் வார்னர் கூறியதாவது:
இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் போட்டியை நடத்தியதற்கு இலங்கைக்கு நன்றி. இங்கு விளையாடியதற்கு நாங்கள் பெருமையாக உணர்கிறோம். எங்களுக்கு ஆதரவு அளித்த இலங்கை மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த பயணத்தினை எப்போதும் மறக்கமாட்டோம். எந்தவிதமான சூழ்நிலையிலும் இலங்கை மக்கள் தங்கள் முகத்தில் சிரிப்பை வைத்துக் கொண்டு எங்களை வர்வேற்ற இந்நாட்டை பெரிதும் நேசிக்கிறேன். எல்லாவற்றுகும் நன்றி. மேலும் நானும் எனது குடும்பமும் சுற்றுலாவிற்காக இலங்கைக்கு ஒருநாள் வருவோம்.