பேட்டிங் ரகசியம் குறித்து ரிஷப் பந்த் கூறியது என்ன? 

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 3வது முக்கியமான ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார் ரிஷப் பந்த்.
பேட்டிங் ரகசியம் குறித்து ரிஷப் பந்த் கூறியது என்ன? 

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 3வது முக்கியமான ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார் ரிஷப் பந்த்.

இந்திய அணி, 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ஆரம்பத்தில் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இதன்பிறகு ரிஷப் பந்தும் பாண்டியாவும் அபாரமாக விளையாடி இந்திய அணியை மீட்டுக்கொண்டு வந்தார்கள். பாண்டியா 55 பந்துகளில் 71 ரன்களும் ரிஷப் பந்த் 113 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 125 ரன்களும் எடுத்தார்கள். ஆட்ட நாயகன் விருதை ரிஷப் பந்தும் தொடர் நாயகன் விருதை பாண்டியாவும் பெற்றார்கள்.

ஆட்ட நாயகன் விருதினைப் பெற்ற ரிஷப் பந்த் கூறியதாவது: 

இந்த ஆட்டத்தினை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன். ஒரு சமயத்தில் ஒரு பந்தில் மட்டுமே கவனம் செலுத்துவேன். அணியே அழுத்தத்தில் இருக்கும் போது நாம் அப்படித்தான் விளையாடியாக வேண்டும். எனக்கு எப்போதுமே இங்கிலாந்தில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். அந்த சூழ்நிலை, காலநிலைகளும் பிடித்தமானதே. அதிகமாக விளையாடும்போது அதிகமான அனுபவம் கிடைக்கிறது. பேட்டிங் விளையாடுவதற்கு அருமையான பிட்ச். அதனால் பவுலர்கள் எதையும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இன்றைக்கு மட்டுமில்லாமல் இந்த தொடர் முழுவதுமே அருமையாக பந்து வீசினார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com