நான் ரசிகர்களுக்காக விளையாடுகிறேன்: வைரலாகும் தோனியின் பதிவு

கடந்த 2014-ஆம் ஆண்டு தோனி வெளியிட்ட எக்ஸ் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.
மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

நான் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இருக்கிறேன் என்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பதிவு வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இடையே நேற்றிரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த தொடரின் முதல் வெற்றியை டெல்லியும், முதல் தோல்வியை சென்னை அணியும் பதிவு செய்தன.

இருப்பினும், இந்த ஆட்டத்தில் இரு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறின. விபத்தில் இருந்து மீண்டும் விளையாட தொடங்கியுள்ள டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் அரைசதம் விளாசி ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்தார்.

மற்றொன்று மகேந்திர சிங் தோனி. 43 வயதாகும் தோனி, தான் தொடக்க காலத்தில் வைத்திருந்த ஹேர் ஸ்டைலுடன் களத்தில் அதிரடியாக ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

கடந்த இரண்டு போட்டிகளில் தோனியின் ஆட்டத்தை பார்க்க ஏங்கியிருந்த ரசிகர்களுக்கு நேற்று விருந்து அளித்தார் தோனி.

8-வது வீரராக களத்துக்கு வந்த தோனி, 3 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் விளாசி 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். கடைசி பந்தை சிக்ஸர் அடித்தது கூடுதல் சிறப்பு.

மகேந்திர சிங் தோனி
டி20 போட்டிகளில் எம்.எஸ்.தோனி புதிய சாதனை!

இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை என்றாலும், பெரிய தோல்வியில் இருந்து தப்பித்து ரன்ரேட்டை தக்க வைத்துள்ளது.

அதிரடி ஆட்டக்காரருக்கான ‘எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர்’ விருது தோனிக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு எக்ஸ் தளத்தில் தோனி வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல. நான் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இருக்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார் தோனி.

தொடக்க கால ஹேர் ஸ்டைலுடன் வலம் வரும் தோனி, அதேபோன்று அதிரடியாக விளையாடுவாரா என்ற கேள்விக்கு, நேற்றைய ஆட்டத்தில் தோனி பதிலளித்துவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com