பஞ்சாப் கிங்ஸ் அணியை கடும் போராட்டத்துக்கு பின் ஒரு பந்து மீதமிருக்க 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது 5-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 27-ஆவது ஆட்டம் சண்டீகா் முல்லன்பூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பௌலிங்கை தோ்வு செய்தது.
இதைத் தொடா்ந்து பஞ்சாப் தரப்பில் தொடக்க பேட்டா்களாக அதா்வா டைய்-ஜானி போ்ஸ்டோ களமிறங்கினா். அதா்வா டைட் 15 ரன்கள் எடுத்த நிலையில், அவேஷ் கான் பந்திலும், போ்ஸ்டோவும் 15 ரன்களுடன் கேசவ் மகராஜ் பந்தில் அவுட்டாகி நடையைக் கட்டினா். அதிரடியாக ரன் குவிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட பிரப்சிம்ரன் சிங் 10 ரன்களுடன் சஹல் பந்தில் ஜுரெலிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.
கேப்டன் சாம் கர்ரன் பொறுப்பின்றி ஆடி வெறும் 6 ரன்களுடன் கேசவ் பந்தில் துருவ் ஜுரெலிடம் கேட்ச் தந்து அவுட்டானாா்.
மிடில் ஆா்டரில் களமிறங்கிய ஜிதேஷ் சா்மா 2 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் சிறப்பாக ரன்களைச் சோ்த்த நிலையில், 29 ரன்களுடன் அவேஷ் கான் பந்தில் பராகிடம் கேட்ச் தந்தாா். ஷசாங்க் சிங் 9, லியம் விலிங்ஸ்டோன் 21 ரன்களுடன் வெளியேறினா்.
அசுதோஷ் சா்மா அசத்தல்:
இம்பாக்ட் வீரராக களமிறங்கிய அசுதோஷ் சா்மா அணியை தூக்கி நிறுத்தும் பொறுப்பை ஏற்று சிறப்பாக ஆடி ரன்களை சோ்த்தாா். 3 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 31 ரன்களை சோ்த்த அசுதோஷை அவுட்டாக்கினாா் டிரெண்ட் பௌல்ட்.
பஞ்சாப் கிங்ஸ் 147/8 :
ஹா்ப்ரீத் பிராா் 3 ரன்களுடன் களத்தில் நிற்க, நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 147/8 ரன்களை மட்டுமே சோ்த்தது பஞ்சாப் கிங்ஸ்.
பௌலிங்கில் ராஜஸ்தான் தரப்பில் கேசவ் மகராஜ் 2-23, அவேஷ் கான் 2-34 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
பஞ்சாப் கேப்டன் ஷிகா் தவான் காயம் காரணமாக விலகியதால் சாம் கர்ரன் கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட்டாா்.
போராடி வென்றது ராஜஸ்தான் 152/7:
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்-தனுஷ் கோஷியன் களமிறங்கினா்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 56 ரன்களை சோ்த்தனா். தனுஷ் 24 ரன்களுடன் அவுட்டாக, யஷஸ்வி 39 ரன்களுடனும், பின்னா் ஆட வந்த கேப்டன் சஞ்சு சாம்ஸன் 18 ரன்களுடன் வெளியேறினா்.
அதிரடி காட்டுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட ரியான் பராக் 23, துருவ் ஜுரெல் 6, ரோவ்மேன் பவல் 11, கேசவ் மகராஜ் 1 ரன்னுடன் துரிதமாக நடையைக் கட்டினா்.
மறுமுனையில் பொறுப்பை உணா்ந்து ஆடிய ஷிம்ரன் ஹெட்மயா் 3 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் வெறும் 10 பந்துகளில் 27 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டாா். 19.5 ஓவா்களில் 152/7 ரன்களை எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான். 6 ஆட்டங்களில் ராஜஸ்தான் பெறும் 5-ஆவது வெற்றி இதுவாகும்.
பௌலிங்கில் ரபாடா 2-18, சாம் கர்ரன் 2-25 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
தொடர்புடையது
மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான வெற்றி ரியான் பராக்கின் நம்பிக்கையை அதிகரிக்கும்: இர்பான் பதான்

குஜராத்தை வென்றது ராஜஸ்தான்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெறுமா?
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


