ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்!

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்Dinamani
Published on
Updated on
1 min read

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று (பிப்ரவரி 11) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் சதம் விளாசி அசத்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் அவருடைய 5-வது சதம் இதுவாகும். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை (5 முறை) சதம் விளாசியுள்ள இந்திய வீரர் ரோஹித் சர்மாவின் சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள்

ரோஹித் சர்மா - 5 சதங்கள்

கிளன் மேக்ஸ்வெல் - 5 சதங்கள்

சூர்யகுமார் யாதவ் - 4

பாபர் அசாம் - 3 சதங்கள்

காலின் முன்ரோ - 3 சதங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com