அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்ற லீக் சுற்றின் 23-வது போட்டி புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த தொடரில் இன்று நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான இலங்கை - நேபாளம் அணிகள் மோதுவதாக இருந்தது.
இதுவரை நேபாள அணி 1 லீக் ஆட்டத்தில் ஆடி தோல்வியும், இலங்கை அணி 2 லீக் ஆட்டங்களில் ஆடி இரண்டிலும் தோல்வியும் கண்டுள்ளன.
ஆனால், இந்த ஆட்டத்திற்கான டாஸ் தொடங்குவதற்கு முன்னர் அங்கு கனமழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர், ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் நேபாள அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியது.
ஏற்கனவே முன்னாள் சாம்பியனான இலங்கை அணியின் சூப்பர்-8 வாய்ப்பு மங்கிய நிலையில் அந்த அணியும் தொடரில் இருந்து வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: வங்கதேசத்தை வென்றது இலங்கை

ஐபிஎல் கிரிக்கெட்: நுழைவுச்சீட்டு பெற்றிருப்போா் மாநகர பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாம்

இந்தியன் ஃபுட்பால் லீக்: ராஜஸ்தான் யுனைடெட் வெற்றி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


