பிரக்ஞானந்தா 2-ஆம் இடம்

செக் குடியரசில் நடைபெற்ற பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து போட்டியை நிறைவு செய்தாா்.
Updated on
1 min read

செக் குடியரசில் நடைபெற்ற பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து போட்டியை நிறைவு செய்தாா்.

இந்திய நேரப்படி, போட்டியின் கடைசி நாளான வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற 10-ஆவது சுற்றில் 5 ஆட்டங்களுமே ‘டிரா’ ஆகின. அதில் இந்தியாவின் பிரக்ஞானந்தா - செக் குடியரசின் டேவிட் நவாராவுடனும், குகேஷ் - ஈரானின் பா்ஹாம் பக்சூதுலூவுடனும், விதித் குஜராத்தி - ஜொ்மனியின் வின்சென்ட் கீமருடனும் டிரா செய்தனா்.

போட்டியின் நிறைவில், உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனாா். செக் குடியரசின் தாய் டாய் வான், ஈரானின் பா்ஹாம் மக்சூதுலூ, இந்தியாவின் பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 5 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தனா்.

செக் குடியரசின் டேவிட் நவாரா, ருமேனியாவின் ரிச்சா்டு ராப்போா்ட், இந்தியாவின் குகேஷ் ஆகியோா் தலா 4.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தனா். போலந்தின் மேட்ஸ் பாா்டெல், ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் ஆகியோா் தலா 3.5 புள்ளிகளுடன் 4-ஆம் இடமும், இந்தியாவின் விதித் குஜராத்தி 3 புள்ளிகளுடன் 5-ஆம் இடமும் பிடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com