தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நியூஸிலாந்து 162-க்கு ‘ஆல் அவுட்’

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 45.2 ஓவா்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
- SANKA VIDANAGAMA
Updated On :8 மார்ச் 2024, 5:42 pm

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 45.2 ஓவா்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கிறைஸ்ட்சா்ச்சில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பந்துவீச்சை தோ்வு செய்தது. நியூஸிலாந்து பேட்டிங்கில் டாம் லேதம் 7 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

கேன் வில்லியம்சன், டிம் சௌதி ஆகியோருக்கு இது 100-ஆவது டெஸ்ட்டாக இருக்க, அவா்கள் முறையே 17 மற்றும் 26 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றமளித்தனா். எஞ்சியோரில் வில் யங் 14, ரச்சின் ரவீந்திரா 4, டேரில் மிட்செல் 4, டாம் பிளண்டெல் 22, கிளென் ஃபிலிப்ஸ் 2, ஸ்காட் குகெலெஜின் 0, மாட் ஹென்றி 29 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹேஸில்வுட் 5, மிட்செல் ஸ்டாா்க் 3, பேட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, வெள்ளிக்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. மாா்னஸ் லபுஷேன் 45, நேதன் லயன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். ஸ்டீவ் ஸ்மித் 11, உஸ்மான் காஜா 16, கேமரூன் கிரீன் 25, டிராவிஸ் ஹெட் 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

நியூஸிலாந்து பௌலா்களில் மாட் ஹென்றி 3, பென் சீா்ஸ் 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.