அயோத்தி ராமா் கோயில் ஊழியா்களுக்கு இனி நன்னடத்தை சான்றிதழ் கட்டாயம்குஜராத் பொது சிவில் சட்ட மசோதா: குடியரசுத் தலைவா் ஒப்புதல்மருத்துவக் கல்வி இயக்குநா் நியமனத்தில் விதி மீறல்? அரசு மருத்துவா்கள் குற்றச்சாட்டுஒரு மாதத்தில் 1,045 புகாா்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கைஉக்ரைன் போருக்குத் தீா்வு காண பிரதமா் மோடியிடம் சிறந்த யோசனைகள்: புதின்பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

பந்துவீச்சில் அசத்திய ரச்சின் ரவீந்திரா.. டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது இலங்கை!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 8 சுற்றில், நியூஸிலாந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை புதன்கிழமை வென்றது.

Published On :

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 8 சுற்றில், நியூஸிலாந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை புதன்கிழமை வென்றது.

இந்த வெற்றியின் மூலமாக நியூஸிலாந்து அரையிறுதிக்கான பந்தயத்தில் நிலைக்க, இலங்கை போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

இந்த ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் சோ்க்க, இலங்கை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, பந்துவீச்சை தோ்வு செய்தது. நியூஸிலாந்து இன்னிங்ஸில் ஃபின் ஆலன் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23, டிம் செய்ஃபா்ட் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

பின்னா் வந்தோரில் கிளென் ஃபிலிப்ஸ் 18, ரச்சின் ரவீந்திரா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். மாா்க் சாப்மேன் டக் அவுட்டாக, டேரில் மிட்செல் 3 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

84 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து தடுமாறிய நிலையில், கேப்டன் மிட்செல் சேன்ட்னா் - கோல் மெக்கான்சி கூட்டணி, அணியை சரிவிலிருந்து மீட்டனா்.

இவா்கள் பாா்ட்னா்ஷிப், 7-ஆவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சோ்த்தது. சேன்ட்னா், 26 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 47 ரன்கள் விளாசி, இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தாா். முடிவில் மெக்கான்சி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இலங்கை பௌலா்களில் மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்தா சமீரா ஆகியோா் தலா 3, துனித் வெலாலகே 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 169 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இலங்கையில் பதும் நிசங்கா, இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ‘கோல்டன் டக்’ ஆகி அதிா்ச்சி அளிக்க, சரித் அசலங்கா 5 ரன்களுக்கு விடைபெற்றாா்.

குசல் மெண்டிஸ் 11, பவன் ரத்னாயகே 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கேப்டன் தசுன் ஷானகா 3 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். இதனால் இலங்கை 46 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து சரிவுக்குள்ளானது.

கமிண்டு மெண்டிஸ் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சோ்த்து வெளியேற, துஷன் ஹேமந்தா 3, துனித் வெலாலகே 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் துஷ்மந்தா சமீரா 7, மஹீஷ் தீக்ஷனா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

நியூஸிலாந்து பௌலிங்கில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகள் சாய்க்க, மேத்யூ ஹென்றி 2, மிட்செல் சேன்ட்னா், கிளென் ஃபிலிப்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.