ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஆசியக் கோப்பை: இந்திய மகளிர் அணி 8-ஆவது முறை சாம்பியன்!

மகளிருக்கான 10-ஆவது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியது.

Published On :

மகளிருக்கான 10-ஆவது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியது.

இறுதி ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் சேர்க்க, இலங்கை 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழந்து 111 ரன்களே எடுத்தது.

இந்த வெற்றியுடன், போட்டியில் இந்தியா 8-ஆவது முறையாக சாம்பியன் ஆனது. இதற்கு முன், 2004, 2005-06, 2006, 2008, 2012, 2016, 2022 ஆகிய ஆண்டுகளில் இந்தியா வாகை சூடியது.

முன்னதாக இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணியில், ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தது. ஷஃபாலி 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 68, ஸ்மிருதி 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14, ரிச்சா கோஷ் 17, தீப்தி சர்மா 5 ரன்களுக்கு வெளியேற, ஓவர்கள் முடிவில் பாரதி ஃபுல்மாலி 2, ஜி.கமலினி 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை பெüலர்களில் மிதாலி அயோத்யா, சமரி அத்தபட்டு, சாமுடி பிரபோதா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் இலங்கை இன்னிங்ஸில் இமேஷா துலானி 4, கேப்டன் சமரி அத்தபட்டு 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 36, விஷ்மி குணரத்னே 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனர்.

ஹர்ஷிதா சமரவிக்ரமா 9, நீலாக்ஷிகா சில்வா 1 பவுண்டரியுடன் 22, கவிஷா தில்ஹரி 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். ஹாசினி பெரெரா 1, மிதாலி அயோத்யா 0, சுகந்திகா குமாரி 1, கெüஷினி நுத்யங்கனா 9 ரன்களுக்கு வீழ்ந்தனர்.

இந்திய பௌலர்களில் ஸ்ரீசரணி 4, தீப்தி சர்மா 3, கிராந்தி கெüட், ஷஃபாலி வர்மா, பிரேமா ராவத் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.