மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ஆசிய கோப்பை அரையிறுதி: இலங்கைக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்துள்ளது.

படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.

இலங்கைக்கு 131 ரன்கள் இலக்கு; இறுதிப்போட்டியில் யார்?

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் ஃபாத்திமா சனா 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷாவல் ஷுல்ஃபிகர் 24 ரன்களும், குல் ஃபெரோஷா 21 ரன்களும் எடுத்தனர். துபா ஹாசன் 12 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இலங்கை தரப்பில் கேப்டன் சமாரி அத்தப்பத்து மற்றும் சமுடி பிரபோதா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுகந்தி குமாரி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the Asia Cup cricket semi-final against Sri Lanka, the Pakistan team scored 130 runs for the loss of 5 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.