
ஆசிய கோப்பை: அரையிறுதியில் இலங்கையுடன் மோதும் பாகிஸ்தான்! இந்தியாவுக்கு யாருடன்?
மகளிருக்கான ஆசிய கோப்பை டி20யில் அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் குறித்து...

பாகிஸ்தான் மகளிரணி. - படம்: எக்ஸ் / ஏசியன் கிரிக்கெட் கவுன்சில்.
மகளிருக்கான ஆசிய கோப்பை டி20யில் இதுவரை மூன்று அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. மொத்தம் 8 அணிகளில் இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் முன்னேறியுள்ளன.
மீதமுள்ள ஓரிடத்துக்கு இன்றிரவு 8 மணிக்கு யுஎஇ - வங்கதேச அணிகள் மோதவிருக்கின்றன. இதில் வெல்லும் அணி அரையிறுதிக்கு நான்காவது அணியாக தேர்வாகும் என்பது கவனிக்கத்தக்கது.
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங் காங் ஆகிய அணிகளும் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், யுஎஇ, இந்தோனேசியா ஆகிய அணிகளும் பங்கேற்றன.
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற, பி பிரிவில் தற்போதைக்கு இலங்கை மட்டுமே முன்னேறியுள்ளன.
அரையிறுதிப் போட்டியில் இலங்கையுடன் பாகிஸ்தான் அணி மோதுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் யுஎஇ அல்லது வங்கதேசம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று மோதவிருக்கிறது.
இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி 55 ரன்களுக்கு சுருண்டது. ஒருவேளை இலங்கையை அரையிறுதியில் வென்றால், மீண்டும் இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்திக்க பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ð ð¦ðð¬ð¬ð¢ð¯ð ð°ð¢ð§ ð¬ðð§ðð¬ ððð¤ð¢ð¬ððð§ ðð¡ð«ð¨ð®ð ð¡ ðð¨ ðð¡ð ð¬ðð¦ð¢-ðð¢ð§ðð¥ð¬ ð¨ð ðð¡ð #ðððð¨ð«ð¥ððð¨ð¦ðð§ð¬ðð¬ð¢ððð®ð©ðððð ðµð°#DPWorldWomensAsiaCup2026 #PAKWvHKW #ACC pic.twitter.com/Qn7khunTos
— AsianCricketCouncil (@ACCMedia1) September 7, 2026
Summary
Womens Asia Cup T20: Pakistan to face Sri Lanka in the semi-final!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







