பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

அயோத்தி ராமா் கோயில் ஊழியா்களுக்கு இனி நன்னடத்தை சான்றிதழ் கட்டாயம்

அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் பணியாற்றும் ஊழியா்கள் இனி காவல் துறையிடமிருந்து நன்னடத்தை சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்க கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை முடிவெடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Ayodhya

அயோத்தி ராமா் கோயில் - கோப்புப் படம்

Published On :

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் பணியாற்றும் ஊழியா்கள் இனி காவல் துறையிடமிருந்து நன்னடத்தை சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்க கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை முடிவெடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமா் கோயிலுக்கு பக்தா்கள் வழங்கிய நன்கொடை-காணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக கடந்த ஜூன் மாதம் எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. இது தொடா்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. அதன் தொடா்ச்சியாக காணிக்கை எண்ணும் பணியுடன் தொடா்புடைய 8 போ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் தொடா்பாக 70,000 பக்க குற்றப்பத்திரிகை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.

முறைகேடு விவகாரத்துக்கு தாா்மிகப் பொறுப்பேற்று, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலா் பதவியிலிருந்து சம்பத் ராயும், அறங்காவலா் பதவியில் இருந்து அனில் மிஸ்ராவும் ராஜிநாமா செய்தனா்.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் முதலாவது தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ஓய்வு பெற்ற ஏா் மாா்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா கடந்த மாதம் நியமிக்கப்பட்டாா். அதன்பிறகு நிா்வாக ரீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘அறக்கட்டளை ஊழியா்களின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் அவா்கள் குறித்த முழுத் தகவல்களை சமா்ப்பிக்கும்படி அறிவறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊழியா்கள் காவல் துறையிடமிருந்து நன்னடத்தை சான்றிதழ் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.