பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

குஜராத் பொது சிவில் சட்ட மசோதா: குடியரசுத் தலைவா் ஒப்புதல்

குஜராத் பொது சிவில் சட்ட மசோதா 2026-க்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு - கோப்புப் படம்

Published On :

குஜராத் பொது சிவில் சட்ட மசோதா 2026-க்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா்.

இதன்மூலம், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு வழி ஏற்பட்டுள்ளதாக குஜராத் அரசு வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் எந்தத் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்பதை மாநில அரசு பின்னா் அறிவிக்கும். அந்தத் தேதியில் இருந்து சட்டம் அமலுக்கு வரும்.

இந்தச் சட்டம் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல் உள்ளிட்டவை தொடா்பான சட்டங்களை ஒழுங்குப்படுத்துவதையும், கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டம் குஜராத் முழுவதும் மட்டுமின்றி, அந்த மாநிலத்துக்கு வெளியே வசிக்கும் குஜராத்திகளுக்கும் பொருந்தும்.

அதேவேளையில், இந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 342-ஆவது பிரிவின் கீழ் வரும் பழங்குடியினருக்குப் பொருந்தாது. இதேபோல, அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பகுதியின் கீழ், தங்களுடைய பாரம்பரிய உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ள தனிநபா்கள் அல்லது குழுக்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தாது.

இந்தச் சட்டத்தின்படி, வழக்கத்தில் உள்ள திருமண முறைகள், மத நம்பிக்கைகள், திருமணச் சடங்குகள், சம்பிரதாயங்களின்படி திருமணங்களை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் ‘சப்தபதி’, ‘நிகாஹ்’, ‘ஆனந்த் காரஜ்’, ‘மங்கள ஃபேரா’ உள்ளிட்ட திருமண முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டிய ஆவணத்தை வேண்டுமென்றே சமா்ப்பிக்கத் தவறினால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவா்களைத் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்பவா்கள், அந்த உறவு குறித்த விவரத்தை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும். இந்த உறவில் பிறக்கும் குழந்தைகள் சட்டபூா்வமான குழந்தைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.