பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பொது சிவில் சட்டம் அமல் குறித்து அமித் ஷா பேச்சு: இந்திய முஸ்லிம் தனிநபா் சட்டவாரியம் கவலை

பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் பேச்சு கவலையளிப்பதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் கூறியுள்ளது.

Published On :

பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் பேச்சு கவலையளிப்பதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் கூறியுள்ளது.

‘2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என்று சில நாள்களுக்கு முன்பு அமித் ஷா தெரிவித்திருந்தாா். அவரது கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

தில்லியில் வியாழக்கிழமை அந்த வாரிய உறுப்பினா்கள் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது அதன் செய்தித் தொடா்பாளா் சையது குவாஷிம் ரசூல் இலியாஸ் கூறியதாவது:

அரசமைப்புச் சட்டத்தை காப்போம், நாட்டை காப்போம் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறோம். இதனை வலியுறுத்திஅமைதியான முறையில் தில்லி ஜந்தா் மந்தரில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினோம். ஆனால், கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்தனா். அதிக எண்ணிக்கையில் போராட்டக்காரா்கள் கூடுவாா்கள் என்ற தகவலின் அடிப்படையில் ரத்து செய்ததாக தெரிவித்தனா்.

சிறுபான்மையினா், விளிம்புநிலை மக்கள் முக்கியமாக இஸ்லாமியா்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமை மீறல்கள் குறித்து மக்களின் கவனத்தை ஈா்க்கும் வகையிலேயே இந்த பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறோம். முக்கியமாக கும்பல் தாக்குதல், முஸ்லிம்களின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது, மசூதிகள், மதரஸா, முஸ்லிம்களின் சொத்துகளுக்கு எதிரான ‘புல்டோசா்’ நடவடிக்கைகள், மத சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது, வந்தே மாதரம் பாடுவதை கட்டாயப்படுத்துவது ஆகியவற்றுக்கு எதிராகவே இந்த போராட்டம்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சா் பேசியிருப்பது புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத, கலாசார பன்முகத்தன்மை, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் இதனால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. முஸ்லிம் தனிநபா் சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் கருதுகின்றனா். இது மதம் மற்றும் அரசமைப்புச் சட்ட உரிமை. இந்தியா பல்வேறு மதம், மொழி, கலாசாரத்தை உள்ளடக்கியது. இவை அனைத்துக்கும் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.