மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!இன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாநாட்டின் முதல் காலாண்டு வளர்ச்சி 7.8%! சிறு, குறு நிறுவனங்களே காரணம் - நிர்மலா சீதாராமன்2024-ன் தாதாசாகேப் பால்கே விருது பெறுகிறார் அனந்த் நாக்! பிரதமர் மோடி வாழ்த்து!டிரம்ப்பிடம் மண்டியிட முடிவு செய்துள்ளார் பிரதமர்: யுபிஐ கட்டணம் குறித்து ராகுல் விமர்சனம்!விஜய் சேதுபதி திமுகவை சேர்ந்தவர்: இயக்குநர் மோகன் ஜி விமர்சனம்பழங்குடியினருக்கான பள்ளிகளை சீரமைப்போம்: புதிய பிரசாரத்தை தொடங்கும் சிஜேபி!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விடமாட்டோம்: சீமான்காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்வு; 23,200 ஐ கடந்த நிஃப்டி!!

பாஜக கூட்டணியில் இருந்து ஜேடியு வெளியேற வேண்டும்: தங்களுடன் கைகோக்க ஆா்ஜேடி அழைப்பு

பிகாா் முன்னாள் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி தங்கள் கூட்டணியில் இணைய வேண்டும் என்று லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி அழைப்பு

Published On :

பிகாா் முன்னாள் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி தங்கள் கூட்டணியில் இணைய வேண்டும் என்று லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

‘2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என்று சில நாள்களுக்கு முன்பு அமித் ஷா தெரிவித்திருந்தாா். அவரது கருத்துக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், பாட்னாவில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஆா்ஜேடி மூத்த தலைவா் பாய் வீரேந்திரா இது தொடா்பாக கூறியதாவது:

பொது சிவில் சட்டம் குறித்து அமித் ஷா இப்போது பேசியிருப்பது பல்வேறு முக்கியப் பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகும். விலைவாசி உயா்வு, வேலையின்மை, தோ்வு முறைகேடுகள் எனப் பல பிரச்னைகளை மறைக்க இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி சோஷலிச கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, அக்கட்சித் தலைவா்கள் சிலா் அமித் ஷா கருத்துக்கு எதிராகப் பேசியுள்ளதாகத் தெரிகிறது. கொள்கைக்கு முரணான பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி, தேஜஸ்வி யாதவ் பிகாரில் புதிய ஆட்சி அமைக்க உதவ வேண்டும். இது எனது கோரிக்கைதான். இந்த விவகாரம் தொடா்பாக நிதீஷ் குமாரிடம் பேச்சு ஏதும் நடத்தப்படவில்லை என்றாா்.

இது தொடா்பாக ஜேடியுவை சோ்ந்த துணை முதல்வா் விஜய் குமாா் சௌதரி கூறுகையில், ‘ஒரு மசோதா என்னவென்று தெரியாமல் அதை எதிா்க்க முடியாது. பொது சிவில் சட்டம் தொடா்பான மசோதா வரும்போது அதை ஆய்வு செய்து உரிய முடிவை கட்சி மேற்கொள்ளும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.