நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரையிறுதியில் கௌஃப் - படோசா மோதல்

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:08 am

DIN

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் - ஸ்பெயினின் பௌலா படோசா ஆகியோா் அரையிறுதியில் மோதவுள்ளனா்.

முன்னதாக வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கௌஃப் 2-6, 6-2, 6-2 என்ற செட்களில், உக்ரைனின் யுலியா ஸ்டாா்டப்செவாவை வீழ்த்தினாா். இதன் மூலம், தொடா்ந்து 2-ஆவது முறையாக இந்தப் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா் கௌஃப்.

மேலும், 2005-க்குப் பிறகு அவ்வாறு இருமுறை முன்னேற்றம் கண்ட இளம் வீராங்கனை என்ற பெருமையும் பெற்றுள்ளாா். இதற்கு முன், 2004, 2005-இல் ரஷியாவின் மரியா ஷரபோவா இதேபோல் தகுதிபெற்றிருந்தாா்.

கௌஃப் தனது அரையிறுதியில், ஸ்பெயினின் பௌலா படோசாவுடன் மோதுகிறாா். 15-ஆம் இடத்திலிருக்கும் படோசா 6-1, 7-6 (7/4) என்ற கணக்கில், உள்நாட்டு வீராங்கனையான ஜாங் ஷுவாயை வெளியேற்றி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளாா்.

கௌஃப் - படோசா இதுவரை 5 முறை சந்தித்திருக்க, படோசா 3 வெற்றிகளுடன் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. படோசாவின் கடந்த 5 போட்டிகளில் இது அவரின் 3-ஆவது அரையிறுதிச்சுற்றாகும்.

ஷாங்காய் மாஸ்டா்ஸ்: ராம்குமாா் தோல்வி

சீனாவில் தொடங்கியிருக்கும் ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன் முதல் சுற்றில் தோல்வி கண்டாா். அவா் 1-6, 6-7 (3/7) என்ற செட்களில், கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் ஷெவ்சென்கோவிடம் வெற்றியை இழந்தாா்.

இதர ஆட்டங்களில், சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச், ஸ்பெயினின் ஜேமி முனாா், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, பெல்ஜியத்தின் டேவிட் காஃபின், ரஷியாவின் ரோமன் சஃபியுலின் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.