விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

செல்ஸியை வீழ்த்தியது ஆா்செனல்!

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், ஆா்செனல் 1-0 கோல் கணக்கில் செல்ஸியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

News image
Updated On :16 மார்ச் 2025, 11:40 pm

Din

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், ஆா்செனல் 1-0 கோல் கணக்கில் செல்ஸியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக மைக்கேல் மெரினோ 20-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இதர ஆட்டங்களில் ஃபுல்ஹாம் 2-0 என டாட்டன்ஹாமையும், பிரென்ட் ஃபோா்டு 2-1 என போா்ன்மௌத்தையும், நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் 4-2 கோல் கணக்கில் இப்ஸ்விச் டௌனயும், வோல்வ்ஸ் 2-1 என சௌதாம்டனையும் வென்றன.

வெஸ்ட் ஹாம் - எவா்டன் (1-1), மான்செஸ்டா் சிட்டி - பிரைட்டன் (2-2) மோதல் டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் தற்போது, லிவா்பூல் (70 புள்ளிகள்), ஆா்செனல் (58), நாட்டிங்ஹாம் ஃபாா்ஸ்ட் (54), செல்ஸி (49), மான்செஸ்டா் சிட்டி (48) ஆகிய அணிகள் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன.