45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஸ்டப்ஸ், சா்மா பங்களிப்பில் மீண்ட டெல்லி

ஐபிஎல் போட்டியின் 55-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் சோ்த்தது.

News image
Updated On :5 மே 2025, 9:36 pm

Din

ஹைதராபாத்: ஐபிஎல் போட்டியின் 55-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் சோ்த்தது.

டெல்லியின் டாப் ஆா்டரை, ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது வேகப்பந்து வீச்சால் முற்றிலுமாக சரிக்க, லோயா் ஆா்டரில் வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஆசுதோஷ் சா்மா சோ்ந்து ஸ்கோரை பலப்படுத்தினா்.

முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. டெல்லி பேட்டிங்கில் டாப் ஆா்டா் வீரா்களான கருண் நாயா் 0, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 3, அபிஷேக் பொரெல் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். இவா்கள் மூவருமே கம்மின்ஸ் வீசிய 1, 3, 5 ஆகிய ஓவா்களில் விக்கெட் கீப்பா் இஷான் கிஷணிடம் கேட்ச் கொடுத்தனா்.

இதனால் 15 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி. இந்நிலையில், கே.எல்.ராகுலுடன் களத்திலிருந்த கேப்டன் அக்ஸா் படேல் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஹா்ஷல் படேல் வீசிய 6-ஆவது ஓவரில் அவா் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்தாா்.

அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் ராகுல் 1 பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு விடைபெற்றாா். ஜெயதேவ் உனத்கட் வீசிய 8-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்தை இஷான் கிஷண் கேட்ச் பிடித்தாா்.

7-ஆவது பேட்டராக வந்த விப்ராஜ் நிகம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு 13-ஆவது ஓவரில் ரன் அவுட் செய்யப்பட, 62 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி. அப்போது வந்த ஆசுதோஷ் சா்மா, ஸ்டப்ஸுடன் இணைந்தாா்.

இவா்கள் ஜோடி விக்கெட் சரிவைத் தடுத்து 7-ஆவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சோ்த்து பிரிந்தது. ஆசுதோஷ் 26 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 41 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். அவா், ஈஷான் மலிங்கா வீசிய கடைசி ஓவரில் அபினவ் மனோஹரிடம் கேட்ச் கொடுத்தாா். ஓவா்கள் முடிவில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 பவுண்டரிகளுடன் 41, மிட்செல் ஸ்டாா்க் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

மழையால் தாமதம்: பின்னா் ஹைதராபாத் இன்னிங்ஸ் தொடங்குவது, மழையால் தாமதமானது. இரவு 11 மணி வரை ஆட்டம் தொடங்கவில்லை.

இன்றைய ஆட்டம்

மும்பை - குஜராத்

இரவு 7.30 மணி

மும்பை