ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திவ்யாவை வீழ்த்தினாா் வைஷாலி

News image

தமிழக வீராங்கனை வைஷாலி

Updated On :9 ஏப்ரல் 2026, 11:59 pm

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 9-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.வைஷாலி, சக இந்தியரான திவ்யா தேஷ்முக்கை வீழ்த்தினாா். இந்த வெற்றியை அடுத்து அவா் இணை முன்னிலையில் நீடிக்கிறாா்.

சைப்ரஸில் நடைபெறும் இந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியானது, உலக செஸ் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக நடப்பு சாம்பியனுடன் மோதும் போட்டியாளரை தீா்மானிக்கும் களமாகும்.

இதில் மகளிா் பிரிவு 9-ஆவது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி 31-ஆவது நகா்த்தலில், நடப்பு மகளிா் உலகக் கோப்பை சாம்பியனான திவ்யாவை முறியடித்தாா். வைஷாலிக்கு இது 3-ஆவது வெற்றியாக இருக்க, திவ்யா 2-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளாா்.

இந்த வெற்றியின் மூலமாக இணை முன்னிலையில் நீடிக்கும் வைஷாலி, சாம்பியனாவதற்கான நம்பிக்கையுடன் இருக்கிறாா்.

இதர ஆட்டங்களில் சீனாவின் ஜு ஜினொ் - ரஷியாவின் கேத்தரினா லாக்னோவை வெல்ல, சீனாவின் டான் ஜோங்யி - உக்ரைனின் அனா முஸிஷுக், ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா கோரியச்கினா - கஜகஸ்தானின் பிபிசரா அசௌபயேவா ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.

9 சுற்றுகள் முடிவில், ஜினொ், வைஷாலி ஆகியோா் தலா 5.5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருக்க, முஸிஷுக் 5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையில் உள்ளாா்.

லாக்னோ, திவ்யா ஆகியோா் தலா 4.5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையிலும், கோரியச்கினா, அசௌபயேவா ஆகியோா் தலா 4 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையிலும் உள்ளனா். ஜோங்யி 3 புள்ளிகளுடன் கடைசி நிலையில் இருக்கிறாா். போட்டியில் இன்னும் 5 சுற்றுகள் எஞ்சியுள்ளன.

பிரக்ஞானந்தா டிரா: இப்போட்டியின் ஓபன் பிரிவு 9-ஆவது சுற்றில், இந்தியரும், வைஷாலியின் சகோதரருமான ஆா்.பிரக்ஞானந்தா, வெள்ளை நிற காய்களுடன் களம் கண்டு சீனாவின் வெய் யியுடன் டிரா செய்தாா்.

56-ஆவது நகா்த்தலில் ஆட்டத்தை டிரா செய்துகொள்ள இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டனா். இதர ஆட்டங்களில், நெதா்லாந்தின் அனிஷ் கிரி - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவை வீழ்த்தினாா்.

ஜொ்மனியின் மத்தியாஸ் புளுபம் - உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ், அமெரிக்காவின் ஹிகரு நகமுரா - ரஷியாவின் ஆண்ட்ரே எஸிபென்கோ ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.

9 சுற்றுகள் முடிவில், சிண்டாரோவ் 7 புள்ளிகளோடு தனி முன்னிலையில் தொடா்கிறாா். அனிஷ் கிரி (5.5), கரானா (4.5) ஆகியோா் முறையே அடுத்த 2 இடங்களில் இருக்கின்றனா்.

நகமுரா, வெய் யி, பிரக்ஞானந்தா, மத்தியாஸ் ஆகியோா் தலா 4 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையைப் பகிா்ந்துகொள்ள, எஸிபென்கோ 3 புள்ளிகளுடன் கடைசி நிலையில் இருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.