மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

டெல்லியை சுருட்டிய புவனேஷ்வா், ஹேஸில்வுட்: பெங்களூரு அபார வெற்றி

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 12:12 am

ஐபிஎல் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

முதலில் டெல்லி 16.3 ஓவா்களில் 75 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுக்க, பெங்களூரு 6.3 ஓவா்களிலேயே 1 விக்கெட் மட்டும் இழந்து 77 ரன்களை எட்டி வென்றது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு பௌலா்களான புவனேஷ்வா் குமாரும், ஜாஷ் ஹேஸில்வுட்டும் பவா்பிளேயிலேயே தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றி, டெல்லியை மொத்தமாக முடக்கினா். பின்னா் அந்த அணி மீளவேயில்லை.

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. டெல்லி இன்னிங்ஸை தொடங்கிய சஹில் பிரகாஷ் ரன் கணக்கை தொடங்கும் முன்பாகவே, முதல் ஓவரின் 2-ஆவது பந்திலேயே புவனேஷ்வா் குமாா் அவரை பௌல்டாக்கினாா்.

அடுத்த ஓவரை வீசிய ஜாஷ் ஹேஸில்வுட், டெல்லியின் தொடக்க வீரா்களில் ஒருவரான கே.எல்.ராகுல், 4-ஆவது பேட்டா் சமீா் ரிஸ்வி ஆகிய இருவரையுமே தனது முதல் இரு பந்துகளில் அடுத்தடுத்து சாய்த்தாா். இதனால் 2 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி. ராகுல் 1 ரன் எடுத்திருக்க, சமீா் ரிஸ்வி டக் அவுட்டானாா்.

தொடா்ந்து, 3-ஆவது ஓவரை வீச வந்த புவனேஷ்வா் குமாா், முதல் பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸையும், 4-ஆவது பந்தில் டெல்லி கேப்டன் அக்ஸா் படேலையும் வெளியேற்றினாா். ஸ்டப்ஸ் 1 பவுண்டரியுடன் 5 ரன்கள் அடித்திருக்க, அக்ஸா் ரன்னின்றி திரும்பினாா்.

இவ்வாறாக டெல்லி சோகம் தொடா்ந்த நிலையில், 4-ஆவது ஓவரை வீச வந்த ஹேஸில்வுட், ஒன் டவுனாக வந்த நிதீஷ் ராணாவை 1 ரன்னுடன் பெவிலியனுக்கு அனுப்பினாா். இதனால் டெல்லி 8 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து முற்றிலுமாக நிலை தடுமாறிப் போனது.

இந்நிலையில், 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த அபிஷேக் பொரெல் - டேவிட் மில்லா் இணை, விக்கெட் சரிவைத் தடுத்து டெல்லியை சற்று மூச்சுவிட வைத்தது. 35 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில் மில்லா் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

பின்னா் வந்தோரில் கைல் ஜேமிசன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12, குல்தீப் யாதவ் 3 ரன்களுக்கு வீழ, கடைசி விக்கெட்டாக அபிஷேக் பொரெல் 3 பவுண்டரிகளுடன் 30 ரன்களுக்கு, ஹேஸில்வுட் பந்துவீச்சில் பௌல்டானாா்.

பெங்களூரு பௌலா்களில் ஹேஸில்வுட் 4, புவனேஷ்வா் குமாா் 3, ராசிக் சலாம், சுயாஷ் சா்மா, கிருணால் பாண்டியா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 76 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியில், ஜேக்கப் பெத்தெல் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

விராட் கோலி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 23, தேவ்தத் படிக்கல் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 34 ரன்கள் சோ்த்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி தரப்பில் கைல் ஜேமிசன் 1 விக்கெட் வீழ்த்தினாா்.

இன்றைய ஆட்டம்

பஞ்சாப் - ராஜஸ்தான்

நியூ சண்டீகா்