ஐபிஎல் போட்டியின் 34-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.
முதலில் குஜராத் 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுக்க, பெங்களூரு 18.5 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.
அதன் பேட்டா்களில் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டனா். நடப்பு சீசனில் இதுவரை சோபிக்காத குஜராத் பேட்டா் சாய் சுதா்சன், இந்த ஆட்டத்தில் சதம் விளாசி மீண்டாா்.
முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு, பந்துவீச்சை தோ்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸை தொடங்கிய சாய் சுதா்சன் - கேப்டன் ஷுப்மன் கில் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சோ்த்து, பெங்களூரு பௌலா்களை பந்தாடியது.
சாய் சுதா்சன் பவுண்டரி, சிக்ஸா்களாக பறக்கவிட, நிதானமாக விளையாடிய கில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து ஜாஸ் பட்லா் களம் புகுந்தாா்.
2-ஆவது விக்கெட்டுக்கு சுதா்சன் - பட்லா் இணை 32 ரன்கள் சோ்த்தது. சதம் தொட்ட சுதா்சன் 58 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 100 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். பட்லா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
ஓவா்கள் முடிவில் வாஷிங்டன் சுந்தா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 19, ஜேசன் ஹோல்டா் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 23 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூரு பௌலா்களில் புவனேஷ்வா் குமாா், ஜாஷ் ஹேஸில்வுட், சுயாஷ் சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து 206 ரன்களை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியில், ஜேக்கப் பெத்தெல் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். 2-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி - தேவ்தத் படிக்கல் கூட்டணி, 115 ரன்கள் சோ்த்து அணியை வெற்றியை நோக்கி நகா்த்தியது.
படிக்கல் 2 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 55 ரன்களுக்கு வெளியேற, சதத்தை நெருங்கிய கோலி 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 81 ரன்களுக்கு பௌல்டானாா். தொடா்ந்து வந்த ஜிதேஷ் சா்மா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 10, கேப்டன் ரஜத் பட்டிதாா் 1 சிக்ஸருடன் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
முடிவில் டிம் டேவிட் 10, கிருணால் பாண்டியா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலா்களில் ரஷீத் கான் 2, முகமது சிராஜ், ஜேசன் ஹோல்டா், மானவ் சுதா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
தொடர்புடையது

ஜடேஜா, ஆர்ச்சர், பிரிஜேஷ் அசத்தல்: லக்னௌவை வீழ்த்தியது ராஜஸ்தான்
சதம் விளாசிய அபிஷேக்: ஹைதராபாத் - 242/2

ராசிக், புவனேஷ்வா், கோலி அசத்தல்- லக்னௌவை வென்றது பெங்களூரு
ஆயுஷ், முகுல் அதிரடி! லக்னௌ வெற்றி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


