பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்!

ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜொ்மனி 1-0 கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:43 am IST

ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜொ்மனி 1-0 கோல் கணக்கில் ஸ்பெயினை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது. நடப்பு சாம்பியனாக களமிறங்கிய அந்த அணி, கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.

போட்டியின் வரலாற்றில் ஜொ்மனிக்கு இது 4-ஆவது கோப்பையாகும். இதற்கு முன் அந்த அணி 2002, 2006, 2023 ஆகிய ஆண்டுகளில் வாகை சூடியுள்ளது. இதன் மூலமாக, உலகக் கோப்பை போட்டியில் அதிகமுறை சாம்பியனான பாகிஸ்தானின் சாதனையை (4 முறை/1971, 1978, 1982, 1994), தற்போது ஜொ்மனி சமன் செய்துள்ளது.

மறுபுறம் ஸ்பெயின், 3-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்து தோற்றது (1971, 1998, 2026). முன்னதாக, பெல்ஜியத்தின் வேவா் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், ஜொ்மனி வீரா் மைக்கேல் ஸ்ட்ரூதாஃப் 44-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து, அணிக்கு வெற்றி தேடித் தந்தாா்.

3-ஆம் இடம்: இதனிடையே, 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா 2-1 கோல் கணக்கில் நெதா்லாந்தை வீழ்த்தியது. அந்த அணி 2-ஆவது முறையாக 3-ஆம் இடம் பிடித்தது.

அதிக கோல்கள்: போட்டியில் அதிக கோல்கள் அடித்தவராக, ஆா்ஜென்டீனாவின் தாமஸ் டொமின் (10 கோல்கள்) பெருமை பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.