மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரியோ ஓபன் - எட்செவெரி சாம்பியன்

பிரேஸிலில் நடைபெற்ற ரியோ ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரி திங்கள்கிழமை சாம்பியன் ஆனார்.

News image

IANS

Updated On :23 பிப்ரவரி 2026, 10:47 pm

பிரேஸிலில் நடைபெற்ற ரியோ ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரி திங்கள்கிழமை சாம்பியன் ஆனார்.

இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த எட்செவெரி 3-6, 7-6 (7/3), 6-4 என்ற செட்களில், சிலியின் அலெக்ஸôண்ட்ரோ டபிலோவை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலமாக எட்செவெரி தனது முதல் ஏடிபி பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.

இதற்கு முன் 3 ஏடிபி டூர் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை வந்து தோல்வியைத் தழுவினார். டபிலோவை 2}ஆவது முறையாக நேருக்கு நேர் சந்தித்துள்ள எட்செவெரி, 2}ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இரட்டையர்: இப்போட்டியிலேயே இரட்டையர் பிரிவில், பிரேஸிலின் மார்செலோ மெலோ/ஜாவ் ஃபொன்சேகா கூட்டணி 4}6, 6}3, 10}8 என்ற செட்களில், நெதர்லாந்தின் ராபின் ஹேஸ்/கான்ஸ்டன்டின் ஃப்ரான்ட்ùஸன் இணையை வீழ்த்தி வாகை சூடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.