ஹைதராபாத் அதிரடி வெற்றி

Published on

ராஞ்சி ராயல்ஸ் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஹைதராபாத் டூபான்ஸ் அதிரடி வெற்றி பெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில் ராஞ்சி அணி அதிரடியாக ஆடி 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. டாம் பூன் 11, 17 நிமிஷங்களில் ராஞ்சிக்காக கோலடித்தாா்.

இரண்டாம் பாதியில் வீறு கொண்டு ஆடிய ஹைதராபாத் அணி தரப்பில் அமன்தீப் லக்ரா 42, நிக் உட்ஸ் 45, தல்விந்தா் சிங் 57 கோலடித்து தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தனா். இதன் மூலம் ஹைதராபாத் அணி 3 புள்ளிகளை ஈட்டியது.

Dinamani
www.dinamani.com