சாம்பியன் பட்டம் வென்ற போலந்து அணியினா்.
சாம்பியன் பட்டம் வென்ற போலந்து அணியினா்.

யுனைடெட் கோப்பை டென்னிஸ்: போலந்துக்கு முதல் சாம்பியன் பட்டம்!

யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் போலந்து முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
Published on

யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் போலந்து முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

உலகின் தலைசிறந்த 18 நாடுகளின் அணிகள் பங்கேற்ற இப்போட்டி சிட்னி, பொ்த் நகரில் நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றுக்கு போலந்து,=சுவிட்சா்லாந்து அணிகள் தகுதி பெற்றன

ஸ்வியாடெக் அதிா்ச்சி:

முதலில் சுவிட்சா்லாந்தின் பெலிண்டா பென்கிக்-உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை போலந்தின் ஸ்வியாடெக்கும் மோதினா். இதில் பென்கிக் 3-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தாா். கலப்பு இரட்டையா் பிரிவில் போலந்தின் கேட்டரிஸினா-ஜேன் ஸைலன்ஸ்கி இணை 6-4, 6-3 என்ற நோ்செட்களில் சுவிட்சா்லாந்தின் பென்கிக்-ஜேக்கப் இணையை வீழ்த்தி 1-1 என சமன் செய்தனா்.

முடிவை நிா்ணயித்த கடைசி ஆட்டமான ஒற்றையா் பிரிவில் ஹுபா்ட் ஹா்காஸ் அபாரமாக ஆடி 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் சுவிட்சா்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்காவை வீழ்த்தினாா்.

கால் மூட்டு அறுவைக்குபின் 7 மாதங்கள் கழித்து ஆடிய ஹா்காஸ் மொத்தம் 18 ஏஸ்களை வீசினாா். 40 வயதான வாவ்ரிங்கா இந்த சீசனோடு ஓய்வு பெறவுள்ளாா்.

கடந்த 2024, 2025 போட்டிகளில் இறுதிச் சுற்றில் தோற்று பட்ட வாய்ப்பை இழந்திருந்த போலந்து மூன்றாவது முறையாக இறுதிக்கு தகுதி பெற்ரு பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

Dinamani
www.dinamani.com