உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

ஆயுஷ் ஷெட்டி முன்னேற்றம்

News image

ஆயுஷ் ஷெட்டி - ayush shetty insta

Updated On :4 ஜூன் 2026, 5:17 am IST

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, ரோஹன் கபூர்/ருத்விகா ஷிவானி ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

ஆடவர் ஒற்றையரில், ஆயுஷ் ஷெட்டி 8-21, 22-20, 21-15 என்ற கேம்களில், சீனாவின் வெங் ஹாங் யாங்கை தோற்கடித்தார்.

கலப்பு இரட்டையரில், ரோஹன் கபூர்/ருத்விகா ஷிவானி ஜோடி 21-14, 21-14 என்ற நேர் கேம்களில், சீன தைபேவின் யாங் போ சுவான்/ஹு லிங் ஃபாங் இணையை வீழ்த்தியது.

இதர இந்தியர்கள் தங்கள் பிரிவில் தோல்வி கண்டனர். ஹெச்.எஸ். பிரணய் 17-21, 21-16, 19-21 என்ற கணக்கில், அயர்லாந்தின் நாட் குயெனிடம் தோல்வியுற்றார்.

போட்டித்தரவரிசையில் 4}ஆம் இடத்திலிருந்த சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி, மலேசியாவின் காங் காய் ஜிங்/ஆரோன் டாய் இணையை எதிர்கொண்டது. இந்திய இணை 6-11 என பின்தங்கியிருந்தபோது, சாத்விக் தோளில் வலி ஏற்பட, இந்திய ஜோடி போட்டியிலிருந்து விலகியது.

உன்னதி ஹூடா 15-21, 14-21 என, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வியைத் தழுவினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.