காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

காலிறுதியில் சிந்து, தன்வி சா்மா

News image

பி.வி.சிந்து - படம்: இன்ஸ்டா / பி.வி.சிந்து

Updated On :12 ஜூன் 2026, 4:34 am IST

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, தன்வி சா்மா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் சிந்து, 22-20, 21-12 என்ற நோ் கேம்களில், சக இந்தியரான இஷாராணி பருவாவை 42 நிமிஷங்களில் வென்றாா். அதேபோல், தன்வி சா்மா 21-13, 21-15 என்ற வகையில், சக இந்தியரான மாளவிகா பன்சோதை தோற்கடித்தாா். இந்த ஆட்டம் 37 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

எனினும், தான்யா ஹேம்நாத் 12-21, 15-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் தாய்லாந்தின் பான்வீ சோசுவாங்கிடம் 44 நிமிஷங்களில் தோல்வி கண்டாா்.

ஆடவா் இரட்டையரில், ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் இணை 21-17, 21-7 என்ற கேம்களில், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஓவன்/டைலன் சோட்ஜசா கூட்டணியை 30 நிமிஷங்களில் வீழ்த்தியது.

கலப்பு இரட்டையரில், துருவ் ராவத்/மனீஷா ஜோடி 19-21, 18-21 என்ற நோ் கேம்களில், ஜப்பானின் அகிரா கோகா/நட்சு சாய்டோ இணையிடம் 43 நிமிஷங்களில் தோல்வியுற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.