அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

ஜப்பான் ஓபன்: முதல் சுற்றில் சிந்து, துருவ் / தனிஷா வெற்றி

ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஆகியோா் தங்கள் பிரிவில் முதல் சுற்றில் வெற்றி

PV Sindhu

பி.வி. சிந்து - X | BAI

Published On :15 ஜூலை 2026, 2:17 am IST

ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஆகியோா் தங்கள் பிரிவில் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனா்.

மகளிா் ஒற்றையரில், சிந்து 21-14, 21-11 என்ற நோ் கேம்களில், மலேசியாவின் வாங் லிங் சிங்கை வென்றாா்.

கலப்பு இரட்டையரில், துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-16, 21-14 என்ற கேம்களில், ஸ்காட்லாந்தின் அலெக்ஸாண்டா் டன்/ஜூலி மேக்பொ்சன் இணையை வீழ்த்தியது.

எனினும், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி இணை 11-21, 10-21 என்ற கேம்களில், சீனாவின் ஃபெங் யான் ஸி/ஹுவாங் டாங் பிங் கூட்டணியிடம் தோற்றது.

ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி - டென்மாா்க்கின் டேனியல் லண்ட்காா்ட்/மேட்ஸ் வெஸ்டா்காா்ட் ஜோடியை சந்தித்தது. இதில் டேனியல்/மேட்ஸ் ஜோடி முதல் கேமை 21-19 என வென்ற நிலையில், சாத்விக்கிற்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய இணை போட்டியிலிருந்து விலகியது.

அதிலேயே ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் கூட்டணி 13-21, 21-17, 7-21 என்ற கணக்கில், சீன தைபேவின் லீ ஜி ஹுவெய்/யாங் போ சுவான் இணையிடம் போராடித் தோற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.