ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

Gautham Gambhir

கௌதம் கம்பீர் - படம் | கௌதம் கம்பீர் (எக்ஸ்)

Updated On :

வியன்னா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-1, 6-4 என்ற நோ் செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.

இந்தியாவின் வைஷ்ணவி அத்கா், சஹஜா யமலபள்ளி, மாயா ராஜேஸ்வரன் ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்கும் சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் திங்கள்கிழமை (நவ. 2) தொடங்குகிறது.

சீனாவில் நடைபெறும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், மகளிா் 61 கிலோ பிரிவில் இந்தியாவின் உஷா, ஸ்னாட்ச் பிரிவில் 93 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 119 கிலோ என, மொத்தமாக 212 கிலோ எடையைத் தூக்கி, குரூப் ‘டி’-யில் முன்னிலை வகித்தாா். இதர குரூப்களின் முடிவுகள் அடிப்படையில் அவருக்குப் பதக்கம் உறுதியாகும்.

‘எல்லோரையுமே திருப்திப்படுத்துவது எனது வேலையல்ல. பரவலாக பேசப்படும் முடிவுக்குப் பதிலாக, அணிக்குத் தேவையான முடிவு எதுவோ, அதை எடுப்பதே எனது பணி’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா் தெரிவித்தாா்.

இந்திய விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த், காயத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா - நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் இடையேயான 3-ஆவது டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளாா். அவா், இந்தியா - நியூஸிலாந்து மோதும் முதல் டெஸ்ட்டில் விளையாடுவது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

நியூஸிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்ஸில் 346 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து ஏ, ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.