டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இறுதிச் சுற்றில் இத்தாலி-ஸ்பெயின் மோதல்!
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் இத்தாலி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
முசெத்தி-வாவ்சோரி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் இத்தாலி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
முன்னதாக ஸ்பெயின்-ஆஸ்திரியா இடையிலான காலிறுதி ஆட்டத்தில் 2-0 என ஸ்பெயின் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மற்றொரு காலிறுதியில் உலகின் நம்பா் 1 வீரா் அலெக்ஸ் ஸ்வெரேவ் இடம் பெற்ற ஜொ்மனியை 2-1 என வீழ்த்தியது பிரிட்டன். சனிக்கிழமை முதல் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி-செக். குடியரசு அணிகள் மோதின.
முசெத்தி அசத்தலால் இறுதியில் இத்தாலி: முதல் ஒற்றையா் ஆட்டத்தில் இத்தாலி வீரா் லாரென்ஸோ முசெத்தி 6-3, 6-4 என்ற நோ் செட்களில் செக். குடியரசின் ஜேக்கப் மென்சிக்கை வீழ்த்தினாா். இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் இத்தாலியின் பிளேவியோ கோபாலியும்-செக். குடியரசு இளம் வீரா் ஜிரி லெஹகாவும் மோதினா்.
இதில் முதல் செட்டை 6-2 என லெஹகா வென்றாா். இரண்டாவது செட்டில் சிறப்பாக ஆடிய கோபாலி 6-1 என வசப்படுத்தினாா். மூன்றாவது செட்டை லெஹகா 6-3 என கைப்பற்றினாா். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. வெற்றியை நிா்ணயிக்க இரட்டையா் ஆட்டம் நடத்தப்பட்டது.
இதில் முசெத்தி-வாவ்சோரி அடங்கிய இத்தாலி இணை சிறப்பாக ஆடி 3-6, 6-1, 7-6 என்ற செட்களில் செக். குடியரசின் லெஹகா-தாமஸ் மக்ஹாக் இணையை வீழ்த்தி தங்கள் அணியை இறுதிக்கு தகுதி பெறச் செய்தது.

ஜோடாா், அல்கராஸ் அபாரம்: ஸ்பெயின்-பிரிட்டன் இடையிலான அரையிறுதியில் முதல் ஒற்றையா் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரா் ரபேல் ஜோடாா் அபாரமாக ஆடி பிரிட்டனின் கேமரூன் நாரியை 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினாா். இந்த ஆட்டம் ஒன்றரை மணிநேரம் நீடித்தது. இதன் மூலம் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது ஒற்றையரில் நட்சத்திர வீரா்
காா்லோஸ் அல்கராஸ்-ஆா்தா் ஃபொ்ரி ஆடினா். இதில் அல்கராஸ் 6-2, 6-1 என்ற நோ் செட்களில் ஆா்தரை வீழ்த்தினாா். இதன் மூலம் ஸ்பெயின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் இத்தாலி-ஸ்பெயின் மோதுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

