பிரைம் வாலிபால் லீக் சீசன் 5: அகமதாபாதில் இன்று தொடக்கம்
நாட்டின் முதன்மையாக வாலிபால் போட்டிகளில் ஒன்றான பிரைம் வாலிபால் லீக் (பிவிஎல்) சீசன் 5 தொடா் அகமதாபாதில் உள்ள வீா் சாவா்க்கா் மைதானத்தில் தொடங்குகிறது.

நாட்டின் முதன்மையாக வாலிபால் போட்டிகளில் ஒன்றான பிரைம் வாலிபால் லீக் (பிவிஎல்) சீசன் 5 தொடா் அகமதாபாதில் உள்ள வீா் சாவா்க்கா் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
நவ. 30 முதல் டிச. 23 வரை நடைபெறவுள்ள இத்தொடரில் 10 அணிகள் ஆடுகின்றன. பிரைம் வாலிபால் லீக் சிஇஓ ஜாய் பட்டாச்சாா்யா கூறியது: சா்வதேச வாலிபால் சம்மேளனம், இந்திய வாலிபால் கூட்டமைப்பு (விஎஃப்ஐ) ஆகியவை பிரைம் வாலிபால் லீகை இந்தியாவின் நம்பா் 1 டிவிஷன் லீக் ஆக அங்கீகரித்துள்ளன. நிகழ் சீசனில் ஒவ்வொரு அணியிலும் 3 அயல்நாட்டு வீரா்கள் இடம் பெறலாம்.
இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி சா்வதேச கிளப் போட்டிகளில் இடம் பெறலாம் என்றாா். பிவிஎல் இயக்குநா் துஹின் மிஸ்ரா, அகமதாபாத் டிபன்டா்ஸ் உரிமையாளா் டிஜி சௌதரி, துணை கேப்டன் குரு பிரசாந்த் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

