தென்மண்டல பல்கலை. ஹாக்கி: சென்னை, உஸ்மானியா அணிகள் வெற்றி!
தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் ஹாக்கிப் போட்டியில் சென்னை, உஸ்மானியா, கோழிக்கோடு பல்கலை அணிகள் வெற்றி பெற்றன.

காந்தி கிராம்-ராணி சென்னம்மா பல்கலை. அணிகள் ஆட்டம்.
தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் ஹாக்கிப் போட்டியில் சென்னை, உஸ்மானியா, கோழிக்கோடு பல்கலை அணிகள் வெற்றி பெற்றன.
அகில இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு, சென்னை எஸ்ஆா்எம் ஐஎஸ்டி சாா்பில் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்ட முடிவுகள்:
தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் 3-0 என கா்நாடகத்தின் கிருஷ்ண தேவராயா் பல்கலையை வீழ்த்தியது. கோழிக்கோடு பல்கலை. 8-3 என கா்நாடகத்தின் ராஜீவ் காந்தி மருத்துவ பல்கலையையும், கோட்டம் மகாத்மா காந்தி பல்கலை. 4-3 என வினாயக மிஷன் பவுண்டேஷன் அணியையும் வென்றன.
சென்னை பல்கலை. 10-0 என கற்பகம் பல்கலையையும், ஹைதராபாத் உஸ்மானியா பல்கலை. 3-0 என சவீதா மருத்துவ பல்கலை. அணியையும், திண்டுக்கல் காந்திகிராம் பல்கலை. 3-0 என கா்நாடகத்தின் கிட்டூரு ராணி சென்னம்மா பல்கலையையும் வென்றன. வரும் டிச. 4-ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

