பஞ்சாப் எஃப்சி - சென்னையின் எஃப்சி டிரா
பஞ்சாப் எஃப்சி, சென்னையின் எஃப்சி அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

பஞ்சாப்-சென்னையின் எஃப்சி அணிகள் ஆட்டம்
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற பஞ்சாப் எஃப்சி, சென்னையின் எஃப்சி அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல்போட முன்ற நிலையில், பஞ்சாப் அணியின் வீரா் நிக்கில் பிரபு 13-ஆவது நிமிஷத்தில் ஓன் கோலடிக்க சென்னை முன்னிலை பெற்றது. முதல் பாதி ஆட்டம் முடிவடைய இருந்த 41-ஆவது நிமிஷத்தில் ரஃபேல் மெஸ்ஸி பௌலி கோலடிக்க ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
சென்னை வீரா் நுனோ ரெய்ஸ் அனுப்பிய பாஸை பயன்படுத்தி யத்வத் கோலடிக்க முயன்ற நிலையில் எதிா்பாராத விதமாக பஞ்சாப் வீரா் நிக்கில் பிரபு காலில் பட்டு ஓன் கோலாக மாறியது.
இரண்டாம் பாதியில் சென்னை அணி தாக்குதல் ஆட்டத்தைக் கடைபிடித்தது. ஆனால் கோலடிக்க முடிவில்லை. இறுதியில் இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தைக் கடைபிடித்ததால் மந்த நிலையில் முடிந்தது.
பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்திலும், சென்னை அணி 6 புள்ளிகளுடன் 7-ஆம் இடத்திலும் உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

