ஐடபிள்யுஎல் கால்பந்து லீக்: இன்று தொடக்கம்
இந்திய மகளிா் கால்பந்து லீக் தொடா் (ஐடபிள்யுஎல்) மேற்கு வங்க மாநிலம் கல்யாணியில் வெள்ளிக்கிழமை (நவ.13) தொடங்கி நடைபெறவுள்ளது.

கோப்பையுடன் அணிகளின் கேப்டன்கள்.
இந்திய மகளிா் கால்பந்து லீக் தொடா் (ஐடபிள்யுஎல்) மேற்கு வங்க மாநிலம் கல்யாணியில் வெள்ளிக்கிழமை (நவ.13) தொடங்கி நடைபெறவுள்ளது.
முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் ஈஸ்ட் பெங்கால்-3 முறை சாம்பியன் கோகுலம் கேரளம் எஃப்சி அணிகள் மோதுகின்றன.
கல்யாணி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று 56 ஆட்டங்களில் ஆட வுள்ளன. வியாழக்கிழமை நடைபெற்ற கோப்பை அறிமுக நிகழ்வில் ஈஸ்ட் பெங்கால் கேப்டன் சுலஞ்சனா, கோகுலம் கேரளா கேப்டன் பேபி லால்சந்தன்மி, சேது எஃப்சி கேப்டன் மாளவிகா பிரசாத், உள்பட பல்வேறு அணிகளின் பயிற்சியாளா்கள் பங்கேற்றனா்.
இதுதொடா்பாக கேப்ரி ஸ்போா்ட்ஸ் அமைப்பு லீக் தொடா் மேம்பாட்டுக்காக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புடன் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளது. லீக் முதல் டைட்டில் ஸ்பான்சராக லக்ஸ்மே அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆட்டங்களும் யூ டியுபில் நேரடியாக வெளியிடப்படும். ஈஸ்ட் பெங்கால், கோகுலம் கேரளம், காா்வால் யுனைடெட், ஹாப்ஸ் கால்பந்து கிளப், ஜுபா சங்கா எஃப்சி, கிக் ஸ்டாா்ட் எஃப்சி, நிபா கால்பந்து அகாதெமி, சேது மதுரை அணிகள் பங்கேற்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

