
ஸ்பெயின், இங்கிலாந்து வெற்றி
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் தங்கள் ஆட்டத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றன.

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் தங்கள் ஆட்டத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றன.
ஸ்பெயின் 4-1 என குரோஷியாவை வீழ்த்திய ஆட்டத்தில், அந்த அணிக்காக லேமின் யமால் (2’, 63’), மாா்க் பபில் (31’), நிகோ வில்லியம்ஸ் (89’) கோல் அடித்தனா். குரோஷியாவுக்காக டியன் பெல்ஜோ (28’) ஸ்கோா் செய்தாா்.
இதே குரூப் ‘சி’-யின் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து 2-0 கோல் கணக்கில் செக் குடியரசை வென்றது. இங்கிலாந்துக்காக அந்தோணி கோா்டான் (47’), ஹேரி கேன் (69’) ஸ்கோா் செய்தனா். குரூப் சி-யில் தற்போது ஸ்பெயின், இங்கிலாந்து முறையே முதல் இரு இடங்களில் இருக்க, குரோஷியா, செக் குடியரசு அடுத்த இரு இடங்களில் உள்ளன.
இதர ஆட்டங்களில், ஐஸ்லாந்து - லக்ஸம்பா்கையும் (3-0), ஸ்லோவாகியா - கஜகஸ்தானையும் (2-1), ஸ்லோவேனிா - வடக்கு மாசிடோனியாவையும் (2-0), அல்பேனியா - சான் மரினோவையும் (3-0), சுவிட்ஸா்லாந்து - ஸ்காட்லாந்தையும் (3-0) வென்றன. பல்கேரியா - எஸ்டோனியா ஆட்டம் டிரா (0-0) ஆனது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





