விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

சாம்பியன்ஸ் லீக்: முதல் போட்டியில் 16 அணிகள் வெற்றி, 4 அணிகள் டிரா!

சாம்பியன்ஸ் லீக்கில் முதல் போட்டியில் வென்ற அணிகள் குறித்து...

Champions League logo

சாம்பியன்ஸ் லீக் இலச்சினை - படம்: எக்ஸ் / சாம்பியன்ஸ் லீக்

Published On :

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக்கின் முதல் போட்டியில் இதுவரை 36 அணிகள் விளையாடியுள்ளன. அதில் 16 அணிகள் வெற்றியையும் 4 அணிகள் சமனிலும் முடித்துள்ளன.

முதல் நாளில் நடைபெற்ற போட்டியில் 12 அணிகள் வெற்றியைப் பெற்றன. இரண்டாவது நாளில் 4 அணிகள் வெற்றியையும் 4 அணிகள் சமனிலும் முடித்தன. முதல் சுற்றில் மொத்த அணிகளும் 69 கோல்கள் அடித்துள்ளன.

ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பயர்ன் மியூனிக் அணி போடோ/க்ளிமிட் அணியை 5-0 என வீழ்த்தியது. இதில் ஜமால் முசியாலா 47ஆவது நிமிஷத்திலும் ஹாரி கேன் 61ஆவது நிமிஷத்திலும் அல்போன்ஸோ டேவிஸ் 77ஆவது நிமிஷத்திலு கோல் அடித்தார்கள்.

நட்சத்திர வீரர் மைக்கேல் ஒலிஸே 83, 90+2ஆவது நிமிஷத்தில் 2 கோல்கள் அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

அடுத்த போட்டியில் ஆர்சி லென்ஸ் அணி 3- 2என்ற கோல் கணக்கில் ஸ்லாவியா பிராக் அணியை வீழ்த்தியது. இதில் 49ஆவது நிமிஷத்தில் ஸ்லாவியா அணியின் மிகுலாஸுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.

அடுத்த போட்டியில் முதல்முறையாக 70 ஆண்டுகால சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடிய கோமா 1907 அணி 4-1 என வரலாற்று வெற்றியைப் பெற்றது.

அடுத்த போட்டியில் ரெட் டெவில்ஸ் எனப்படும் மான்செஸ்டர் யுனைடெட் 4-0 என்ற கோல் கணக்கில் ஷபா அணியை வீழ்த்தியது.

ரோமா - ஃபெனர்பாகே, பிஎஸ்வி - எஃப்சி ஷக்தார் டொனெட்ஸ்க் போட்டிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தன. மொத்தம் 36 அணிகளில் டாப் 8 இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளிப் பட்டியலில் 9-24 வரை இடம்பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப்ஸ் போட்டிகளில் விளையாடி அதிலிருந்து 8 அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாகுமென்பது கடந்த சீசன் முதல் உருவாக்கப்பட்ட புதிய நடைமுறை என்பதும் கவனிக்கத்தகது.

சாம்பியன்ஸ் லீக் பட்டியல்

1. பிஎஸ்ஜி

2. பயர்ன் மியூனிக்

3. பார்சிலோனா

4. மான்செஸ்டர் யுனைடெட்

5. கோமோ 1907

6. எஸ்சிபி

7. விஎஃப்பி ஸ்டட்கார்ட்

8. மான்செஸ்டர் சிட்டி

Summary

Champions League: 16 teams win, 4 teams draw in the first round of matches!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.