சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஆசிய விளையாட்டுப் போட்டி: வெள்ளி வென்றார் இந்தியாவின் தீபக் குமார்!

ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்... 

News image
Updated On :20 ஆகஸ்ட் 2018, 5:22 am

ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

18-ஆவது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. 

இன்று நடைபெற்ற 10 மீ. ஏர் ரைஃபிள் இறுதிச்சுற்றில் இந்தியாவின் தீபக் குமார்,  247.7 புள்ளிகள் எடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சீன வீரர் யாங் ஹாவோரன் 249.1 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். 

இதனிடையே ஜப்பானுக்கு எதிரான பேட்மிண்டன் போட்டியில் இந்திய 1-2 எனப் பின்தங்கியுள்ளது. இந்தியாவின் சாய்னா நேவால், 11-21, 25-23, 16-21 என்கிற செட் கணக்கில் ஜப்பானின் ஒகுஹராவிடம் தோற்றார்.  

இதுவரையிலான பதக்கப் பட்டியலில் இந்திய அணி  1 தங்கம் 1 வெள்ளி 1 வெண்கலத்துடன் 8-ம் இடத்தில் உள்ளது. சீனா 9 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.