நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் செயல் அது: தோனிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு!
அதை நாட்டுப்பற்றாகத்தான் பார்க்கவேண்டும், தேசியவாதமாக அல்ல என்று...


தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2019 உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா. சஹல், ரோஹித் சர்மா அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்நிலையில் அந்த ஆட்டத்தில் தோனி பயன்படுத்திய கிளவுஸ் தொடர்பாகப் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி, இந்தியத் துணை ராணுவ சிறப்புப் படையின் பாலிதான் என்கிற முத்திரையைக் கொண்ட கிளவுஸை அணிந்திருந்தார். தியாகம் என்கிற அர்த்தம் கொண்ட முத்திரை அது. 2011-ல் தோனிக்கு ராணுவத்தில் கெளரவ லெப்டினெண்ட் பதவி வழங்கப்பட்டது. ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, நாட்டுப்பற்றுடன் ராணுவ முத்திரை கொண்ட கிளவுஸை தோனி அணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது.
ஆனால், இது ஐசிசி விதிமுறையை மீறியுள்ளதாக பிசிசிஐயிடம் ஐசிசி புகார் அளித்துள்ளது. இதையடுத்து தோனியின் கிளவுஸில் உள்ள ராணுவ முத்திரையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பிசிசிஐக்கு ஐசிசி கட்டளையிட்டுள்ளது. ஐசிசி விதிமுறைகளின்படி வீரர்களின் ஆடைகள், கிரிக்கெட் உபகரணங்களில் மதம், அரசியல் போன்றவற்றின் பிரசாரம் இருக்கக்கூடாது. அதனால் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தோனி முதல்முறையாக இந்த விதிமுறையை மீறியுள்ளதால் அவருக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
தோனிக்கு ஆதரவாக பிசிசிஐ நிலைப்பாடு எடுத்துள்ளது. அந்த கிளவுஸை அனுமதிக்குமாறு ஐசிசியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளது. ரசிகர்கள் பலரும் தோனிக்கு ஆதரவாகச் சமூகவலைத்தளங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள்.
இந்நிலையில் தோனியின் செயலுக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
ஆடுகளத்தில் விளையாடும்போது நாட்டுக்காக எங்களை அர்ப்பணிக்கிறோம். இந்தியா பெருமைப்படுவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கிறோம். நாம் அனைவரும் நம் தேசத்தை விரும்புகிறோம். அதைத்தான் தோனியும் செய்துள்ளார். நமது ராணுவ வீரர்களின் தியாகச் செயலுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அதை நாட்டுப்பற்றாகத்தான் பார்க்கவேண்டும், தேசியவாதமாக அல்ல என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...