ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

ஆப்கானிஸ்தானை எளிதாக வென்ற வங்கதேச அணி: ஹைலைட்ஸ் விடியோ

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வங்கதேசம்...

News image
Updated On :25 ஜூன் 2019, 5:22 am

எழில்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வங்கதேசம்.

அரையிறுதி வாய்ப்பை பெறும் முனைப்பில் உள்ள வங்கதேச அணியும், ஒரு வெற்றி கூட பெறாத ஆப்கன் அணியும், செளதாம்ப்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. முதலில் ஆடிய வங்கதேசம் 262/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடி ஆப்கானிஸ்தான் 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பேட்டிங்கிலும் 51 ரன்களை விளாசிய ஷகிப் அல் ஹசன், அபாரமாக பந்துவீசி 5-29 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டத்தில் 5 விக்கெட் வீழ்த்தியும், 50 ரன்கள் விளாசிய சாதனையை யுவராஜ் சிங் செய்திருந்தார். தற்போது வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனும் அச்சாதனையை சமன் செய்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் 7 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியது வங்கதேசம். அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.