வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் இவர்தான்: ரிக்கி பாண்டிங்

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் யார் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

News image

ரிக்கி பாண்டிங் - படம் | ஐசிசி

Updated On :20 ஆகஸ்ட் 2024, 7:20 pm IST

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 5-6 ஆண்டுகளாக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஐசிசி ரிவ்யூவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் பேசியதாவது: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இந்திய அணியில் நீண்ட நாள்கள் விளையாடவில்லை. ஆனால், அவர் காயங்களிலிருந்து மிகவும் வலிமையாக அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். கடந்த 5-6 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு வடிவிலான போட்டிகளிலும் அவர் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வருகிறார்.

ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்)

ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்) - படம் | ஐசிசி

அவருக்கு எதிராக பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்களிடம் பும்ராவின் பந்துவீச்சு குறித்து கேட்டால், அவர் எந்த அளவுக்கு சிறந்து விளங்குகிறார் என்பது தெரியும். அவரது பந்துவீச்சை கணிக்கவே முடியாது. ஒரு பந்து இன் ஸ்விங் என்றால், அடுத்த பந்து அவுட் ஸ்விங். டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் இந்திய அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டு 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிளன் மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு மற்ற வீரர்களிடமிருந்து தனித்துவமாக உள்ளனர். அந்த வரிசையில் பும்ராவும் உள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.