வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஆகஸ்ட் 21) தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அப்துல்லா ஷஃபீக் மற்றும் சைம் அயூப் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கவுள்ளனர். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் 4-வது வீரராக களமிறங்கி விளையாடவுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பாபர் அசாம் நீண்ட காலமாக 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வந்த நிலையில், 3-வது இடத்தில் தற்போது கேப்டன் ஷான் மசூத் களமிறங்கி விளையாடவுள்ளார். 5-வது வீரராக அணியின் துணைக் கேப்டன் சௌத் ஷகீல் களமிறங்கவுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன்
அப்துல்லா ஷஃபீக், சைம் அயூப், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் அசாம், சௌத் ஷகீல் (துணைக் கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி அகா, ஷாகின் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, குர்ரம் ஷாஷத் மற்றும் முகமது அலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...