
ஆப்கானிஸ்தான் அணியின் உதவிப் பயிற்சியாளராக அனுபவமிக்க இந்திய பயிற்சியாளரான ஸ்ரீதரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாடவுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆப்கானிஸ்தான் மோதவுள்ளது.
இந்த இரண்டு தொடர்களுக்கும் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளரான ஜோனதன் டிராட்டுடன், உதவிப் பயிற்சியாளராக ஸ்ரீதர் இணையவுள்ளார். 54 வயதாகும் ஸ்ரீதர் 35 முதல் தர கிரிக்கெட் மற்றும் 15 லிஸ்ட் ஏ போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார். இடதுகை சுழற்பந்துவீச்சாளாரான அவர் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக ஸ்ரீதர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இரண்டு ஐசிசி உலகக் கோப்பைத் தொடர்களில் அவர் அங்கம் வகித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஸ்ரீதர் இணைந்துள்ளது அந்த அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.