பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

முதல் டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வங்கதேசம்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது.

News image
- படம் | AP
Updated On :22 ஆகஸ்ட் 2024, 1:44 pm

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஆகஸ்ட் 21) ராவல்பிண்டியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 எடுத்திருந்தது. சௌத் ஷகீல் 57 ரன்களுடமும், ரிஸ்வான் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சௌத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினர். சௌத் ஷகீல் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அஹா சல்மான் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் எடுத்திருந்தபோது, அந்த அணி டிக்ளேர் செய்தது. பாபர் அசாம் 171 ரன்களுடனும் (11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்), ஷாகின் ஷா அஃப்ரிடி 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் அணி டிக்ளேர் செய்ததையடுத்து, வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது. ஜாகீர் ஹாசன் 11 ரன்களுடனும், ஷாத்மன் இஸ்லாம் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

வங்கதேசம் பாகிஸ்தானைக் காட்டிலும் 421 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.