
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முன்னேறி வருகிறார்.
இங்கிலாந்து அணி தற்போது இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் மான்செஸ்டரில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் 42 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 62* ரன்களும் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனையை நோக்கி முன்னேறி வருகிறார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் எடுத்த வீரராக மாறுவதற்கு ஜோ ரூட்டுக்கு இன்னும் 5 அரைசதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் 64 அரைசதங்களுடன் அதிக அரைசதங்கள் எடுத்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்துள்ள வீரர்கள்
சச்சின் டெண்டுல்கர் - 68 அரைசதங்கள்
சந்தர்பால் - 66 அரைசதங்கள்
ஜோ ரூட் - 64* அரைசதங்கள்
ஆலன் பார்டர் - 63 அரைசதங்கள்
ராகுல் டிராவிட் - 63 அரைசதங்கள்
ரிக்கி பாண்டிங் - 62 அரைசதங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.