டி20 உலகக் கோப்பையை வெல்வோம்; ஹர்மன்பிரீத் கௌர் நம்பிக்கை!
டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அக்டோபர் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் முதலில் வங்கதேசத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. பின்னர், அங்கு நிலவும் அமைதியின்மை காரணமாக போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
டி20 உலகக் கோப்பைக்கான அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் உள்பட பல்வேறு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைத் தொடர்களில் முக்கியமான நேரத்தில் எப்போதும் சிறப்பாக செயல்பட வேண்டும். கடந்த காலங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணி அதிக அளவிலான போட்டிகளில் விளையாடியது கிடையாது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆடுகளங்களின் தன்மை இந்திய ஆடுகளங்களைப் போன்றே இருக்கப் போகிறது என நினைக்கிறேன். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப விரைவில் எங்களை மாற்றிக் கொள்வோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...