வங்கதேச அணிக்காக ஷகிப் அல் ஹசன் மீண்டும் விளையாடுவாரா?

வங்கதேச அணிக்காக மூத்த வீரரான ஷகிப் அல் ஹசன் மீண்டும் விளையாடுவாரா என்பது குறித்து...
ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன்படம் | AP
Published on
Updated on
1 min read

வங்கதேச அணிக்காக மூத்த வீரரான ஷகிப் அல் ஹசன் மீண்டும் விளையாடுவாரா என்பது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் ஃபரூக் அகமது பேசியுள்ளார்.

வங்கதேச அணியின் மூத்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷகிப் அல் ஹசன் அண்மையில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த மண்ணில் தனது கடைசி டெஸ்ட் போட்டியினை ஷகிப் விளையாடுவதாக இருந்தது. இருப்பினும், அவர் பாதுகாப்பு காரணங்களால் அந்தப் போட்டியில் விளையாடவில்லை.

வங்கதேச அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசனின் பெயர் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், சட்ட ரீதியில் ஷகிப் அல் ஹசன் மீது எந்தவொரு பிரச்னையும் இல்லையென்றால், அவர் வங்கதேச அணிக்காக விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் ஃபரூக் அகமது தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷகிப் அல் ஹசன் விவகாரத்தில் என்னால் உறுதியாக எந்தவொரு பதிலையும் கூற முடியாது. அவர் விளையாட வேண்டும் என்பதை நானும் விரும்புகிறேன். அவர் அணியில் இடம்பெறாமல் இருப்பது கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்புடையதல்ல. அவர் அணியில் இல்லாமலிருக்க காரணம், அவர் சட்டரீதியாக சந்தித்து வரும் வழக்குகள். என்னால் இந்த விஷயத்துக்கு எளிதாக தீர்வு தந்துவிட முடியாது. அவர் மீதான சட்ட ரீதியான பிரச்னைகள் முடிவுக்கு வந்தால், அவரால் மீண்டும் வங்கதேச அணிக்காக விளையாட முடியும் என நம்புகிறேன் என்றார்.

வங்கதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்து வந்த அவாமி லீக் கட்சிக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்பாக போராட்டம் வெடித்து பின்னர் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஷகிப் அல் ஹசனுக்கு தொடர்பிருப்பதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com