உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்துக்கு சறுக்கியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருந்தது.
இதையும் படிக்க: ஐசிசியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா!
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஏற்பட்ட வரலாற்று டெஸ்ட் தோல்வியின் காரணமாக, இந்திய அணி தரவரிசையில் 2-வது இடத்துக்கு சறுக்கியது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்துக்கு சறுக்கியது.
3-வது இடத்துக்கு சறுக்கல்
இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இலங்கையை 233 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்குப் பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 61.11 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்திலும், 59.26 சதவிகித வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்திலும், 57.69 சதவிகித வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் நியூசிலாந்து (54.55 சதவிகித வெற்றிகள்) மற்றும் இலங்கை (50.00 சதவிகித வெற்றிகள்) அணிகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!

உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் அணி வெற்றி

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!

யு20 சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் வங்கதேசத்துடன் மோதும் இந்தியா!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

