தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!சென்னை ஐஐடியில் ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய்- மகன்!மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு!மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் இரட்டையர்கள்! ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி?அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமிஅகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
/

அடிலெய்டு டெஸ்ட்டில் மார்னஸ் லபுஷேன் வேண்டாம்: முன்னாள் ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் மார்னஸ் லபுஷேன் வேண்டாம்.

News image

மார்னஸ் லபுஷேன் - படம் | AP

Updated On :30 நவம்பர் 2024, 1:25 pm IST

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் மார்னஸ் லபுஷேன் வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அந்த அணி சிறப்பாக செயல்பட தவறிவிட்டதாக விமர்சித்தனர்.

மார்னஷ் லபுஷேன் வேண்டாம்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெறவுள்ள நிலையில், அந்த போட்டியில் மார்னஸ் லபுஷேன் அணியின் பிளேயிங் லெவனில் வேண்டாம் என மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பல இன்னிங்ஸ்களாக ரன்கள் குவிக்கத் தவறும் மார்னஸ் லபுஷேனை, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்டில் பிளேயிங் லெவனில் களமிறக்கக் கூடாது. பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லையெனில், லபுஷேன் உள்ளூர் போட்டிகளில் இடம்பெற்று விளையாட அது உதவியாக இருக்கும். உள்ளூர் போட்டிகளில் விளையாடி அவர் மீண்டும் ஃபார்முக்குத் திரும்ப வேண்டும். கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு முறை மட்டுமே அவர் 10 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார் என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.