ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் விலகல்; காரணம் என்ன?

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜேபி டுமினி தெரிவித்துள்ளார்.

News image

ஜேபி டுமினி - படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்

Updated On :6 டிசம்பர் 2024, 8:33 pm IST

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜேபி டுமினி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரரான ஜேபி டுமினி தென்னாப்பிரிக்க அணியுடன் இணைந்தார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அவர் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜேபி டுமினி விலகுவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அணியின் பயிற்சியாளராக இணைந்தது முதல் ஜேபி டுமினி, தென்னாப்பிரிக்க அணியின் வளர்ச்சிக்கு மிகுந்த பங்காற்றியுள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அணிக்கு அவர் அளித்த பங்களிப்பு விலைமதிப்பற்றது. குறுகிய வடிவிலான போட்டிகளுக்கான அடுத்த பயிற்சியாளருக்கான தேடலை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க அணிக்காக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகளாக 46 டெஸ்ட், 199 ஒருநாள் மற்றும் 81 டி20 போட்டிகளில் ஜேபி டுமினி விளையாடியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி அதன் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. அதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.